சென்னை: அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடைபெற்ற விவாதத்தின்போது கடந்த 17 ஆம் தேதி நாடாளுமன்ற மேலவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,’அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித் ஷா , பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது. அம்பேத்கரின் கொள்கைகளை பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்து கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்தார். அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகதான். நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல. காங்கிரஸ்தான் அவருக்கு எதிரானது. எனது பேச்சுக்கு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். அவருக்கு அதுதான் நிம்மதியளிக்கும் எனில், ராஜினாமா செய்ய தயார். ஆனாலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர் எதிர்க்கட்சி வரிசையில்தான் அமர்ந்திருப்பார். காங்கிரஸின் குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் உரிய நடவடிக்கை மேற்காள்ளப்படும்” என்று கூறியிருந்தார்
இந்த விவகாரத்தை கையில் எடுத்து இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த நிலையில், திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மத்திய மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம்
இதுபோல மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதுபோல, விசிக சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் விசிகவின் 100 பேர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
முன்னதாக, இதுதொடர்பாக கட்சி தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் முடிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்” எனப் பேசியிருந்தார்.
அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்துவிட்டதாக கூறி, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் அம்பேத்கரின் புகைப்படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்தினர்.
மேலும், மக்களவையில், “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமிட்டனர். மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது அவையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தேசியத் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்டினார்.
“அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். சொல்ல வேண்டும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் இன்று (19-12-2024) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முழுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.