அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள லுனென்பர்க் கவுண்டியில் டிசம்பர் 9 அன்று விலங்குகளை வேட்டையாட ஒரு குழு காட்டுக்குள் சென்றது.
அப்போது கரடி ஒன்றை கவனித்த அவர்கள் அதனை சுட முயற்சி செய்தனர்.
அந்த கரடி மரத்தின் மீது ஏறி ஓடிய நிலையில் அதை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
இதில் அந்த கரடி மரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் அங்கு நின்றிருந்த வேட்டைக்குச் சென்ற குழுவில் இடம்பெற்ற மற்றொரு நபர் மீது விழுந்ததில் அவர் நசுங்கி அடிபட்டார்.
இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெனிக்ஸ் வர்ஜீனியாவைச் சேர்ந்த 58 வயதான லெஸ்டர் ஹார்வி என்பவர் நான்கு நாட்கள் கழித்து சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதுதொடர்பான தகவலை இறந்தவரின் மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் கரடியை வேட்டையாடியது தொடர்பாக வனத் துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மரத்தில் உள்ள கரடியை சுடுவது, சுட்டுப்பிடிப்பது ஆகியவை தடைசெய்யப்பட்ட நிலையில் சுடப்பட்ட கரடி மரத்தில் இருந்து விழுந்ததில் வேட்டையாட சென்ற ஒருவர் உயிரிழந்த செய்தி அமெரிக்காவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.