கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒரு காலத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டார் இன்று சொந்தக் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.
2015ம் ஆண்டு கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ பதவியேற்ற போது அவரை நாடே கொண்டாடிய நிலையில் தற்போது அந்நாட்டு மக்களே அவரை பதவி விலக வேண்டும் என்று கூறுமளவுக்கு மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிறார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை அமைச்சர் சீன் பிரேசர் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
இந்த நிலையில் கனடாவை ஜஸ்டின் ட்ரூடோ கைவிட்டுவிட்டதாகவும், நாட்டை நாசமாக்கிவிட்டதாகவும் கூறி பிரதமர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்று தொலைகாட்சி நேரலை மூலம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை அடுத்து அவர் பதவியில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.