டெல்லி: அம்பேத்கர் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக  தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் விவாதிக்க கோரி நோட்டீஸ் அளித்துள்ளார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபாவில் பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித்ஷா கூறிய கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அம்பேத்கர் மீது ஷாவும் பாஜகவும் வெறுப்புணர்வைக் கொண்டிருப்பதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றம் சாட்டி, அவர்  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து,  விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எ.பி.யான மாணிக்கம் தாகூர் மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில், மேல்சபையில் “இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்” என்ற இரண்டு நாள் விவாதத்தை முடித்த ஷா, காங்கிரஸை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக அரசியல் சட்டத்தையே கிழிந்தெறிந்தவர்கள் காங்கிரசார் என்று,  மேலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீற விரும்புவதாகக் கூறினார்.

மேலும்,  அம்பேத்கரின் பெயரைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாகத் தாக்கினார்.  அதாவது,   அபி ஏக் ஃபேஷன் ஹோ கயா ஹை – அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் , அம்பேத்கர்’ எடுத்திருந்தால் கடவுளின் பெயரை பலமுறை சொன்னால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று கூறினார். ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது என நக்கலடித்தார்.

தற்கு எதிர்ப்பு தெரிவித்த  ராகுல் காந்தி,  மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் என்று ராகுல் அமித்ஷாவை விமர்சித்தார்.

இதுகுறித்து கூறியகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாபாசாகேப்பை உள்துறை அமைச்சர்  அவமதிப்பு செய்துள்ளார்.   பாஜக-ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது என்றும், அவர்களின் முன்னோர்கள் அசோக் சக்ராவை எதிர்த்தார்கள் என்றும்,  முதல் நாளிலிருந்தே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதியை நடைமுறைப்படுத்தவே சங்பரிவார் மக்கள் விரும்பினார்கள் என்றும் சாடினார். “பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஜி இதை அனுமதிக்கவில்லை, அதனால்தான் அவர் மீது இவ்வளவு வெறுப்பு இருக்கிறது” என்று கார்கே கூறினார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலும் ஷாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “எச்.எம். அமித் ஷா, பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கடவுளுக்குச் சமமானவர், அவர் உருவாக்கிய அரசியலமைப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் புனித நூலாகும். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்?  உங்களுக்குத் தெரியாவிட்டால் பேசாதிருங்கள் என்று சாடினார்.

இந்த நிலையில், அமித்ஷாமீது தமிழக எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ்  கொடுத்துள்ளார்.  மனுதர்மத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு அம்பேத்கர் பிரச்சனையாகத்தான் தெரிவார் அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று கூறி உள்ளார்.

மதவாத சிந்தனை கொண்டவர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா என்பது அனைவருக்கும் தெரியும், அம்பேத்கர் மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தியுள்ளார். அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இதுகுறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸை தாக்கல் செய்துள்ளார்.