லபாமா

மெரிக்க நாட்டில் பன்றியின் சிறுநீரகம் பொறுத்தப்பட்ட பெண் நலமாக உள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது. கடந்த மாத இறுதியில் பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் இந்த அறுவை சிகிச்சைஐ வெற்றிகரமாக செய்தனர்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு லூனியின் உடல்நிலை தேறிய நிலையில் 11 நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது நலமாக உள்ள அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்கிறது.

ஆயினும் சில பரிசோதனைகளுக்காக இந்த வாரம் தற்காலிகமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் மூன்று மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.