உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ. 5 கோடி பரிசுத்தொகைக்கான காசோலையை குகேஷுக்கு வழங்கினார்.

சென்னை என்றால் செஸ் என்கிற அளவுக்கு உலகின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பிய தம்பி குகேஷின் வெற்றிப்பயணம் தொடரட்டும் என்று அவர் வாழ்த்தினார்.

மேலும், தமிழ்நாட்டிலிருந்து இன்னும் பல நூறு குகேஷ்களை உருவாக்கிடும் வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் Home of Chess Academy-ஐ தொடங்குவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார்.