டெல்லி
கடந்த 9 நாட்களில் 5 ஆம் முறையாக டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரடல் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில தினங்களாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று சுமார் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை மீண்டும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த வாரத்தின் 2-வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமான இதையும் சேர்த்து டெல்லியில் கடந்த 9 நாட்களில் 5 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்படுகின்றன. இவை அனைத்தும் போலியான மிரட்டல்கள் என்பது காவல்துரை தோனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே காற்று மாசு காரணமாக டெல்லியின்பல்வேறு பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
காவல்துறையினர் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டு, சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த போலி மிரட்டல்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.