டெல்லி

ரும் பிப்ரவரி மாதம் பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைசர் ஜே.பி.நட்டா, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக பதவியேற்றார். விதிகளின்படி தேசிய தலைவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என்றாலும், 2024 மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், பா.ஜ.க.விற்கான புதிய தேசிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்சியின் மாநில அணிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் நிர்வாக தேர்தல்கள் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூத்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் இது குறித்து,

“பா.ஜ.க. மாநில தலைவர்களில் சுமார் 60 சதவீதம் பேரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது., புதிய மாநில தலைவர்களை நியமிக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும்., வரும் பிப்ரவரி மாதம் பா.ஜ.க.விற்கான புதிய தேசிய தலைவர் பதவியேற்க வாய்ப்புள்ளது.

பாஜகவின் புதிய தேசிய தலைவர் அமைச்சரவையில் உள்ளவராகவோ, அல்லது கட்சியின் மூத்த நிர்வாகியாகவோ இருக்கலாம், புதிய தேசிய தலைவர் பதவி யாருக்கு என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை”

என்று தெரிவித்துள்ளார்.