சென்னை: செம்மண் குவாரி வழக்கு தொடர்பான விசாரணைக்கு வனத்துறை அச்சர் பொன்முடி, இன்று காலை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த திமுக ஆட்சியின்போது, அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர், அளவுக்கு அதிகமாக மண் எடுத்துமுறைகேடு செய்தது தொடர்பான செம்மண் குவாரி முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அரசு அனுமதி அளித்த அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி அவரது குடும்பத்தினர்உ ள்பட 8 நபர்கள் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கைத் தொடர்ந்து, அமைச்சர் பொன்முடிக்கு சொந்த ரூ. 14.21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை, பொன்முடிக்கு சம்மன் அனுப்பியது. அதை ஏற்ற பொன்முடி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செம்மண் குவாரி வழக்கு: கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை அளிக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவு!
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு ஆகஸ்டு 22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு