கோவை: அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறையே தேவைப்படும் என கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) சிறப்பு மையத்தினை தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார். கோவையில் ஐமெரிட்டின் ஆட்டோமோட்டிவ் ஏஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் திறப்பு விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கண்காட்சியை கண்டு விவரம் அறிந்தவர், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்து ஆலோசித்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் பல்வேறுகேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு பதில் கூறினார்.
அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர் ஒருவர், AI தொழில்நுட்பத்தால், வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் நிலை உருவாகுமா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய அமைச்சர் பிடிஆர்., தற்போது அதற்கான சூழல் இல்லை. அதற்கு இன்னும் எவ்வளவோ நிறுவனங்கள், தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இவை அனைத்தும் செய்ய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்றவர், அனைத்து துறைகளுக்கும் AI தொழில்நுட்பம் வர இன்னும் ஒரு தலைமுறையே தேவைப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்தியாவிலேயே அதிக பட்டதாரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. மாநிலத்தின் பணக்கார திறமைக் குளம் நிறுவனங்களை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணியாகும் என்று அவர் கூறினார், ஏனெனில் உள்ளூர் மக்கள் பெரும்பான்மையாக உள்ள தொழிலாளர்களை தமிழ்நாடு பெருமையாகக் கொண்டுள்ளது. இது உள்ளூர் ஊழியர்கள் சிறுபான்மையினராக இருந்த மற்ற நகரங்களை விட மாநிலத்திற்கு ஒரு தனித்துவமான நன்மையை அளித்தது. இருப்பினும், மாநிலம் அதன் உள்ளூர் திறமைகளுக்கு இடமளிப்பதில் சவால்களை எதிர்கொண்டது, பல தனிநபர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே வேலை வாய்ப்புகளை நாடுகின்றனர்.
“கடந்த ஆட்சியாளர்கள் அப்படியே போட்டு சென்ற கோவை எல்காட்டை ,உச்சநீதிமன்றம் வரை சென்று திறந்துள்ளோம். இந்த துறைக்கு பொறுப்பேற்ற பின்னர் மாதம் ஒரு முறை வெளிநாடு சென்று மார்கெட் செய்து தமிழகத்திற்கு நிறுவனங்களை ஈர்த்து வருகிறேன். கோவையில் சென்னை அளவிற்கு ஐடி நிறுவனங்களை கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டின் குளோபல் சிட்டி போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டைடல், மினி டைடல் பார்க்குகளின் செயல்பாடு நன்றாக இருக்கின்றது. துபாய் போன்ற நாடுகளில் உள்ளது போல கோவையிலும் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் உருவாக்கப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவால் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படவே 20 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்த AI துறையில் நாம் இப்போதுதான் 5 ம் வகுப்பில் இருக்கிறோம் என்றவர், இந்தியாவிற்கு மென்பொருள் துறையில் அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
உலக அளவில் இந்த துறையில் அளவில்லா வாய்ப்புகள் கொட்டிக்கிடங்கின்றது. சீனாவில் இருந்து எல்லோரும் வெளியே வருகின்றனர். இங்கு மனிதவளம் இருப்பதால் நமக்கு உலக அளவில் அளவில்லா வாய்ப்பு இருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு துறையில் இலக்கை அடைய நிறைய முதலீடுகள் தேவை என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள பல்வேறு அரசு நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என்று கூறியதுடன், ELCOT, TNeGVA, TANFINET, TACTV, ICT Academy, Tamil Virtual Academy, iTNT ஹப் ஆகியவை இந்த ஏஜென்சிகளுக்கு இடையே ஒன்றுடன் ஒன்று சேர்வதைத் தவிர்க்கவும், அவற்றின் சேவைகளை மேம்படுத்தவும் தனித்தனி செயல்பாடுகளுடன் மறுசீரமைக்கப்படும் என்றார்.
மேலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட இந்த ஏஜென்சிகள், நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு-8ன் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அவர் அறிவித்தார்.