இலங்கை மீனவர்கள் பிரச்சனை குறித்து அநுரா திசநாயகாவுடன் பேசி வருகிறோம் ராகுல் காந்தி கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதினார்.

இதனை மேற்கோள்காட்டி எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 28ம் தேதி எழுதிய கட்டத்திற்கு வெளியுறவுத் துறை இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில் இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளதை அடுத்து தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி இலங்கை அதிபரிடம் பேச்சு வார்த்தை நடத்த ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதினார்.

கடந்த செப்டம்பர் மாதம் தான் எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டியுள்ள ராகுல் காந்தி, 37 தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து இலங்கை அதிபரிடம் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

ராகுல் காந்தியின் இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழ்நாடு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.