டெல்லி: மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கனவு திட்டமான ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வர வகை செய்யும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் பதவி வந்த நிலையில், இன்றைய மக்களவை அலுவல் பட்டியலில் மசோதா தாக்கல் தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகிவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், நாளை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் 2024 நவம்பர் 25 அன்று தொடங்கிய நிலையில், டிசம்பர் 20 அன்று நிறைவடைகிறது. முன்னதாக “அரசியலமைப்பு தினத்தை” யொட்டி, 2024 நவம்பர் 26 அன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில், இந்த அமர்வு தொடங்கியது முதல், எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தை கையில் எடுத்து, அவையை முடக்கி வருகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு, இந்த கூட்டத்தொடரில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறையை கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இன்று நடைபெற உள்ள மக்களவை கூட்டத்தில் இதற்கான மசோதா மத்திய சட்டஅமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் தாக்கல் செய்வார் என தகவல்கள் பரவி வந்தன. இதையடுத்து நாடாளுமன்றத்துக்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என கட்சி கொறடாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இன்றைய அமர்[வக்கான அலுவலக பட்டியலில் ஒரேநாடு ஒரே தேர்தல் மசோதா இடம்பெறவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மசோதாவுக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும், அவையில், எதிர்க்கட்சிகளின் பிரச்சினை ஏற்படுத்தும் என்பதால் மசோதா தாக்கல் செய்வது தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் தலைநகரில் இருந்து வெளியாகி உள்ள தகவலின்படி, ஒரே நேரத்தில் தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்கள் – அரசியலமைப்பு (129 வது திருத்தம்) மசோதா மற்றும் யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா – நாளை (செவ்வாய்க்கிழமை) அல்லது இந்த வாரத்தின் பிற்பகுதியில் துணை துணைக்குழுவை சபை நிறை வேற்றிய பிறகு கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.
இன்றைய அலுவலில், மானியங்களுக்கான கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.