இந்தியாவை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நாடு நீக்கியுள்ளது.
சுவிட்சா்லாந்த நாட்டை சேர்ந்த நெஸ்லே நிறுவனத்திற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சுவிட்சா்லாந்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதனால் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய நிறுவனங்களின் ஈவுத்தொகைக்கு 10% வரி விதிக்கப்படும் என சுவிஸ் அரசு கடந்த புதனன்று அறிவித்தது.
தற்போது இந்த வரி விதிப்பு 5% மட்டுமே இருந்து வரும் நிலையில் இதை 10%மாக உயர்த்தியிருப்பது சுவிட்சர்லாந்தில் செயல்படும் இந்திய நிறுவனங்களை வெகுவாக பாதிப்பதுடன் இந்தியாவில் சுவிஸ் முதலீடுகளைப் பாதிக்கும் சுழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிகிறது.
இந்திய தூதரக இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, சுவிட்சர்லாந்தில் உள்ள 179 நிறுவனங்களில் 140 இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
2020 ஏப்ரல் முதல் 2022 நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடு இந்திய மதிப்பில் ரூ. 61,000 கோடியாக ($7.2 பில்லியன்) இருந்தது. இது வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 10வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.