ஐதராபாத்:  நடிகர் அல்லுஅர்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படம் வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் நிலையில், இந்த படம் ரிலிசான தேதியின்று போடப்பட்ட சிறப்பு காட்சியை காண தனது குழந்தையுடன்சென்ற பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், அவரது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் அல்லுஅர்ஜுன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இன்று அவரை கைது செய்தனர். இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அல்லு அர்ஜுன் தரப்பில் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கனவே பதியப்பட்ட வழக்கில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டிசம்பர் 4ந்தேதி அன்று  ஹைதராபாத்தில் நடந்த புஷ்பா 2 படத்தின் பிரீமியரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்தது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவரது மகனின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதால் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு உள்ளது.

தெலுங்கு திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன்  கைது செய்யப்பட்டு உள்ளதாக,  மத்திய மண்டலம், ஹைதராபாத் காவல்துறையின் துணைக் காவல் ஆணையர் (டிசிபி) அக்ஷன்ஷ் யாதவ் தி தெரிவித்து உள்ளனர்.கைதுசெய்யப்பட்டஅல்லுஅர்ஜுன்,  சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் இருந்து உடனடியாக சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய காவல்துறையினர், புஷ்பா-2  பிரிமியர் ஷோ  தொடர்பாக,  சந்தியா தியேட்டர் நிர்வாகம், காவல்துறையினருக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று, இறப்பு நடந்தது தொடர்பாக,   நடிகர் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் தியேட்டர் நிர்வாகம்  மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.