சென்னை
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சில மாவட்டங்களில் ப்ள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இலங்கை-தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என அறிவித்துள்ளது.
இதையொட்டி புதுச்சேரியில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம் வருமாறு:-
- சென்னை
- விழுப்புரம்,
- தஞ்சை,
- மயிலாடுதுறை
- புதுக்கோட்டை,
- கடலூர்,
- ராமநாதபுரம்,
- திண்டுக்கல்,
- காஞ்சிபுரம்,
- திருவாரூர்
Patrikai.com official YouTube Channel