வேளச்சேரி – பெருங்குடி பறக்கும் ரயில் நிலையங்களுக்கு இடையேயான இணைப்பு சாலையை பஜார் வீதியாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் இருந்த இந்த சாலை, சென்னை மாநகராட்சி வசம் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி கிடக்கும் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலையை பஜார் வீதியாக மாற்றும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஒரு ஆலோசகரை மாநகராட்சி நியமித்துள்ளது.
இந்த திட்டத்துக்கான பணிகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் தொடங்கவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.