சென்னை: அழகரா, வேதாந்தாவா என்றால் மோடி அரசுக்கு வேதாந்தாதான் முக்கியம் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்க தாக்கூர் பேசினார்.
டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும் என மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் பேசும்போது, டங்ஸ்டன் சுரங்கம் அனுமதியால், மதுரையில் உள்ள அழகர் மலை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறியவர், மோடி அரசுக்கு கடவுளா, வேதாந்தாவா என்றால் மோடி அரசுக்கு வேதாந்தாதான் முக்கியம் என கூறினார்.
மத்தியஅரசு, தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தை ஏற்று, டங்ஸ்டன் சுரங்க அனுமதி ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தினார்.
ஏற்கனவே காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் கனிம திட்டத்தை கைவிட கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், வேதாந்தா நிறுவனத்துக்கு உதவுவதற்காக புனித தலங்களை கூட பாஜக விட்டு வைக்கவில்லை என்றும் அரிட்டாபட்டியில் கனிம சுரங்கம் அமைத்தால் அழகர் கோவில், பழமுதிர்ச்சோலைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் சார்பில், மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மேலூர், சுருளிப்பட்டி, கிடாரிப்பட்டி, நாயக்கர் பட்டி, தெற்கு தெரு, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்களளை உள்ளடக்கிய சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதுபோல, நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து அதன்மீது பேசினர். அப்போது டங்ஸ்டன் உரிமத்தை ரத்துசெய்ய வலியுறுத்தினர். வ்வாறு அவர் தெரிவித்தார்.