பெங்களூரு: பிரபல மென்பொருள் நிறுவனமான அசெஞ்சர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மென்பொருள் பொறியாளர் அதுல் சுபாஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன்,  அவரது சாவுக்கு அவரது மனைவி நிகிதா மற்றும் அவரது குடும்பத்தாரே காரணம் என்று,  அவரிடம் ரூ.3 கோடி கேட்டு துன்புறுத்தியதாகவும் இறப்பதற்கு முன்பு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதுல் சுபாஷ்  தற்கொலைக்கு காரணாக அவரது  மனைவிழனு நிகிதா  சிங்கானியாIகூ  24மணி நேரத்திற்குள்  பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,   எக்ஸ் தளத்தை முடக்குமாறும் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பலர், அதுல் சுபாஷ் மனைவியான  நிகிதா சிங்கானியாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 நிகிதா சிங்கானியா தற்கொலை செய்து கொண்ட அதுல் சுபாஷின் மனைவி என்பதும், இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும்  குறிப்பிடத்தக்கது.

எண்ணற்ற கோரிக்கையைப் பெற்ற பிறகு, அக்சென்ச்சர் நிறுவனம்,  அளிதுள்ள பதிலிலில், தொழில்நுட்பம் மற்றும் மனித புத்தி கூர்மை ஆகியவற்றிற்கு நாங்கள் ஒன்றாக வாக்குறுதி அளிக்கிறோம், மாற்றம் இருக்கட்டும் என தெரிவித்துள்ளதுடன்,  அதுல் சுபாஷின் மனைவியான நிகிதா  சிங்கானியாவின் டிவிட்டர் பக்கத்தை முடக்கி உள்ளது.

த்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அதுல் சுபாஷ், பெங்களூரூவில் மாரத்தஹள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்த்து வருகிறார்.

இவர் பெங்களூருவில் உள்ள  அசெஞ்சர் ஐடி நிறுவனத்தின் பணியாற்றி வருகிறார்.  சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.  இந்த நிலையில், அதுல், தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில்   மீட்கப்பட்டது.  அவரது அறையில் ஆய்வு செய்த காவல்துறையினர்,  அங்கிருந்து 24 பக்க தற்கொலை கடிதத்தை  எடுத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருவதாக  காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு  எழுதிய கடிதத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. அதில், துல் சுபாஷ் தனது மனைவி நிகிதா சிங்கானியா, அவரது தாயார் நிஷா சிங்கானியா, அவரது சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் அவரது மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர்தான் தனது சாவுக்கு காரணமாக  குற்றவாளிகள் என்று  குறிப்பிட்டுள்ளார்.

“என் (அதுல்) மீதும், எனது குடும்பத்தினருக்கு எதிராகவும் கொலை மற்றும் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியது உள்பட பல பிரிவுகளின் கீழ் எனது மனைவி வழக்கு பதிவு செய்தார்.  நான் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகவும், இது அவரது தந்தைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அவர் மாரடைப்பால் இறந்ததாகவும் என் மீது குற்றம் சாட்டினார். இது பாலிவுட் படத்தில் வரும் கதை போல் உள்ளது.

மனைவி  தன்மீது பொய் வழக்கு போட்டதாகவும், போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெற மனைவி 3 கோடி ரூபாய் கேட்டதாகவும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக  குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும்,  ஜான்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாகரத்தின்  வழக்கின்போது, அந்த நீதிமன்றத்தின்  நீதிபதியான ரீட்டா கௌசிக் தனது துயரத்தை அதிகப்படுத்தியதற்காகவும்  தெரிவித்து உள்ளார்.

“ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் வேலை செய்து சொந்தப் பணத்தை சம்பாதித்தாலும் மனைவி ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு தொகையாக 40,000 ரூபாய் பெற்றுக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் மேலும் 2-4 லட்சம் ரூபாய் கேட்கிறார்” என தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுக்கு விசாரணையில் தனது தந்தை நீண்டகால நோயினால் அவதிப்பட்டு வருவதாக அவரே ஒப்புக்கொண்டார். அவளது தந்தை கடந்த 10 வருடங்களாக இதய நோய், சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில மாதங்களே உயிரோடு இருப்பார் என மருத்துவர்கள் சொன்னதால்தான், விரைவில் திருமணம் செய்து கொண்டோம்.

இந்த வழக்கை முடிப்பதற்காக எனது மனைவியும் அவரது குடும்பத்தினரும் முதலில் 1 கோடி ரூபாய் கேட்டனர். ஆனால் பின்னர் அதை ₹ 3 கோடியாக உயர்த்தினர்” என அதுல் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “அதுல் மீது அவரது மனைவியின் தாய், சகோதரர் மற்றும் அவரது மாமா ஆகியோர் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என அதுலின் சகோதரர் பிகாஸ் குமார் புகார் கூறி இருக்கிறார். வழக்குகளை முடிக்க மனைவி தரப்பில் இருந்து 3 கோடி ரூபாய் கேட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்” என்றார்.

இறப்பதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட அதுல், பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதைத்தொர்ந்து அதுல் தற்கொலை வழக்கு தொடர்பாக,  அவரது மனைவி நிகிதா சிங்கானியா, அவரது மாமியார் நிஷா சிங்கானியா, மனைவியின் சகோதரர் அனுராக் சிங்கானியா மற்றும் அவரது மனைவியின் மாமா சுஷில் சிங்கானியா ஆகியோர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.