சென்னை: தமிழ்நாட்டில், பைக் டாக்சிக்கு காவல்துறை தடை விதித்த சில மணி நேரத்தில், பைக் டாக்சி இயங்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்து உள்ளார்.

சென்னையில் வணிக ரீதியிலான பைக் டாக்சிக்கு தடை விதித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்சி விதிமீறல் இல்லாம் இயங்கலாம் என அறிவித்துள்ளார்.
நகரவாசிகளிடையே ஆன்லைன் கேப் சேவையே முதல் தேர்வாக இருந்து வந்த நிலையில், பைக் டாக்சிசேவை வந்த பிறகு, பலர் இதையே நாடத்தொடங்கி உள்ளனர். சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், பொதுப் போக்குவரத்து தேவையான அளவுக்கு இயக்கப்படாததாலும், எனவே ஆட்டோக்கள் மற்றும் வண்டிகள் அவ்வப்போது வாகன நெரிசலில் சிக்கிக் கொள்வதாலும், , மக்கள் பைக் டாக்ஸி சேவையை நோக்கி நகர்கின்றனர். இதன்மூலம் பயணிகள், சரியான நேரத்தில் இலக்கை அடைய முடிகிறது.
இந்த நிலையில், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் (பைக் டாக்சிகள்) மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பைக் டேக்ஸிக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், காவல்துறையின் அறிவிப்புக்கு மாறாக, பைக் டாக்சிகள் இயங்கலாம் என பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
தமிழ்நாட்டில் பைக் டாக்சி இயங்க தடை இல்லை என்ற கூறியதுடன், அவை விதிமீறலில் ஈடுபடாமல் இயங்கலாம் என்றும், உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
பைக் டாக்சிகள் மீதான அடக்குமுறைக்குப் பின்னடைவைத் தொடர்ந்து, வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் பைக்குகள் பறிமுதல் செய்யப்படாது என்று போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெளிவுபடுத்தினார்.
“பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்ஸிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது, பைக் டாக்சிகள் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைகளை வழங்குகின்றன, அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது” மேலும் பைக் டாக்சிகள் விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காக தணிக்கை செய்யவே உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பைக் டாக்சிக்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…
என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.
பைக் டாக்சிக்கள் மீது நடவடிக்கை! சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…
[youtube-feed feed=1]