சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு காரணாக இன்று காலை  முதலே சென்னைமற்றும்  புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பிற்பகல் 1 மணி வரை 11 மாவட்டளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருபபதாக வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது.

மேலும்,  டெல்டா பகுதிகள்,  புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக  வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவையில் 13 மற்றும் 16-ந்தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த இன்று அதிகாலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் சென்னையின் பல பகுதிகள், மற்றும் புறநகர்ப குகிதளான  திருவேற்காடு, வேலப்பன்சாவடி, வானகரம், காட்டுப்பாக்கம், பூவிருந்தவல்லி, ஐயப்பன்தாங்கல், மாங்காடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதுபோல, புதுச்சேரி முதலியார்பேட்டை, மரப்பாலம், ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்து வரும் மழையால் மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம்- மதுரவாயல் இடையே 3 கி.மீ.க்கு வாகனங்கள் அணிவகுப்பு நிற்கின்றன. மதுரவாயல், ஆலப்பாக்கம் சிக்னலில் வாகனங்கள் நெரிசலால் பணிக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல வடசென்னையின் மின்ட் பகுதி, பாரிமுனை பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது.