டெல்லி: ரேசனில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குவதற்குப் பதிலாக வேலை வாய்ப்பை உருவாக்குங்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இலவச ரேஷன் வழங்குமாறு மாநிலங்களைச் சொன்னால், அவர்களில் பலர் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, தங்களால் முடியாது என்று கூறுவார்கள், எனவே அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது,
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இலவச உணவுப்பொருட்களை வழங்குவதற்கு பதில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியது.
தற்போது நடைபெற்று வரும் செயல்பாட்டின்படி அதிக அளவு ரேசன் பொருட்கள் வழங்குவது தொடரும் என்றால், பருப்பு உள்ளிட்ட தானியங்களுக்கு மத்திய அரசு பொறுப்பு ஏற்கும் என்பதால், மக்களை திருப்திப்படுத்த மாநில அரசுகள் இன்னும் அதிகமான ரேசன் கார்டுகளை வழங்க முன்வரும்.
மாநில அரசுகள்தான் இலவச ரேசன் பொருட்கள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டால், பெரும்பாலான மாநிலங்கள் அது எங்களால் முடியாது. இதனால் நிதி நெருக்கடி உருவாகும் எனத் தெரிவிக்கும். அதற்குப் பதிலாக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய நீதிபதிகள்,
“இலவச ரேஷன் வழங்குமாறு மாநிலங்களை கேட்டுக் கொண்டால், அவர்களில் பலர் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இலவச ரேஷன்களை விநியோகிப்பதை விட வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்தது. இலவசம் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், மாநிலங்களில் தொடர்ந்து ரேசன் கார்டுகளை வழங்கினால், அதற்கு மாநிலங்கள் பணம் கொடுக்குமா? என கேள்வி எழுப்பியது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா “மத்திய அரசு கோதுமை மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை 80 கோடி மக்களுக்கு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (2012) கீழ் வழங்குகிறது என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் “சுமார் 2 முதல் 3 கோடி மக்கள் இன்னும் இந்த திட்டத்திற்கு வெளியில்தான் உள்ளனர்” என்றார்.