மும்பை

மும்பை மக்கள் க்டும் குளிரால் அவதிப்படுகின்றனர்.

கடந்த நவம்பர் மாத இறுதியில் மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் டிசம்பர் மாத முதல்வாரத்தில் குளிரின் தாக்கம் குறைந்து இருந்தது. கடந்த புதன்கிழமை நகரில் 99 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த 2008-க்கு பிறகு டிசம்பரில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும்.

மும்பையில் பெஞ்சல் புயல் காரணமாக குளிரின் தாக்கம் குறைந்து, வெப்பநிலை அதிகரித்ததாக கூறப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களாக மும்பையில் மீண்டும் குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக காலை, இரவு நேரத்தில் பொதுமக்களை நடுங்க வைக்கும் அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளதால் மக்கள் கடுமையாக வதிக்குள்ளாகினர்.

நேற்று முன்தினம் மும்பையில் குறைந்தபட்ச வெப்பநிலை 56.66 டிகிரியாக குறைந்து அதன்பிறகு நேற்று முன்தினம் டிசம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகி இருந்தது. மும்பை, தானே, நவிமும்பை உள்ளிட்ட பெருநகரப்பகுதிகளில் குளிரின் தாக்கம் நேற்றும் அதிகமாகவே இருந்தது. வானிலை ஆஉவு மையம் வரும் வெள்ளிக்கிழமை வரை மும்பையில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி /உள்ளது.