உறவுமுறையில் திருமணம் செய்ய தடை விதிப்பது குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்தவருமான ரிச்சர்ட் ஹோல்டன், இத்தகைய first-cousin marriage திருமணங்களால் பிறப்பு குறைபாடு அதிகமாக உள்ளதாகக் கூறினார்.
திருமணச் சட்டம் 1949 இன் பிரிவு ஒன்று, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகளுக்குள் நடக்கும் எந்தவொரு திருமணமும் செல்லாது என்று கூறுகிறது.
இந்த சட்டத்தின் கீழ், திருமணத்திற்கான தடைசெய்யப்பட்ட உறவுகளில் உடன்பிறப்பு, பெற்றோர் அல்லது குழந்தை திருமணம் ஆகியவை அடங்கும், ஆனால் முதல் தலைமுறை சொந்தங்களுக்கு இடையிலான திருமணங்கள் இடம்பெற வில்லை.
“இங்கிலாந்தில் குடியேறியுள்ள சில சமூகங்களில் உறவுமுறை திருமணங்கள் “மதத்தை விட கலாச்சாரமாக” இருக்கலாம், ஆனால் நவீன பிரிட்டனில் திருமணமும் உறவுகளும் தனிப்பட்ட விருப்பத்தைப் பற்றியதாக இருக்க வேண்டும், அது வேறு எதைப் பற்றியும் இருக்கக்கூடாது” என்று ஹோல்டன் கூறினார்.
“முதல் தலைமுறை சொந்தங்கள் (first-cousin) இடையிலான திருமணத்திற்கு எதிராக பல நாடுகளும் மாநிலங்களும் சமீபத்திய ஆண்டுகளில் நடவடிக்கை எடுத்துள்ளன, நாமும் அதைச் செய்ய வேண்டிய நேரம் இது” என்று அவர் வலியுறுத்தினார்.
இதுகுறித்த தனிநபர் மசோதாவை இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் நாளை அவர் தாக்கல் செய்ய உள்ளதை அடுத்து உறவுமுறை திருமணங்களை தடை செய்ய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.