இதனை அடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ” அப்படி என்றால் நீங்கள் இந்த தீர்மானத்தை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்கிறோம் ” என பேசி முடித்தார்.

அதேபோல், பாமக சார்பில் ஜிகேமணி பேசுகையில், ” இந்த தீர்மானம் குறித்து ஆழமாக சிந்தித்து எடுக்கப்பட்ட தீர்மானம். மாநில அரசு திட்டத்தை கொண்டு போகும்போது அதற்கு மத்திய அரசு இசைவு தர வேண்டும். அதேபோல, மத்திய அரசு மாநில எல்லைக்குள் ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது, மாநில அரசின் அனுமதி குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும்.” எனக் கூறினார்.

விவாதத்தின்மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  டங்ஸ்டன்  சுரங்க சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள்  கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று பதில்  தெரிவித்ததாகவும்,   அப்போது, முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மூர்த்தி அரிட்டாபட்டி மக்களுக்கு தெரிவித்தார். ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறோம். எங்களது கண்டனக் குரலை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கிறோம்.

தமிழக அரசு அலட்சியமாக இருந்ததாக எதிர்க்கட்சி நினைக்கிறது; ஆனால் அப்படியில்லை  என்று கூறிய ஸ்டாலின்,   நான் முதலமைச்சராக இருக்கும்வரை டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன். டங்ஸ்டன் திட்டத்தை தடுத்தே தீருவோம்; ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சுரங்கத்திற்கான ஏலம் விட்டாலும் மாநில அரசு அனுமதி கொடுக்காது என பேரவையில் உறுதி அளிக்கிறேன் கூறியதுடன்,   திமுக ஆட்சியில் எந்த விஷயத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. வேகமாக பேசுவதால் ஏதோ சாதித்துவிட்டதாக எண்ணிக்கொள்ள வேண்டாம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தீர்மானம் அதிமுக உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.