சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் முடிந்து 10 மாதங்கள் ஆன நிலையில், அந்த திட்டத்துக்கு கடந்த 10 மாதங்களாக திமுக அரசு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இரண்டு நாள் கூட்டத்தொடங்கி நடைபெற்ற வருகிறது. இன்றைய முதல்நாள் கூட்டத்தொடரில், அமைச்சர் துரைமுருகன், மதுரை அமைய உள்ள டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
இந்த தீர்மானத்தின்மீது பேசிய முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரான, எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அmப்போது, மதுரை மாவட்டம் மேலுர் அருகே அரிட்டப்பாட்டி அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து நூற்றுக்கணக்கான கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்தான் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தாகத் தெரிகிறது.
இங்கு சுரங்கம் அமைந்தால் அப்பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும், அவற்றில் அரிட்டாப்பட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க இடம் என்றும், குடவரைக் கோயில், சமணச் சின்னங்கள், தமிழ், பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட புராதன நினைவிடமாக இருப்பதும், பஞ்ச பாண்டவர் கல் படுக்கைகள் இருக்கும் இடமாக தொல்பொருள் ஆய்வு சிறப்பிடமாகவும் உள்ளது என்று குறிப்பிட்டு தற்போது தமிழக அரசு எழுதிய கடிதத்தைக் கடந்த பிப்ரவரி மாதமே எழுதியிருக்கலாமே.
அரசு கடிதம் எழுதியது சரி… அந்த கடிதத்தில் என்ன இருந்தது என்பது தெரிய வேண்டாமா? என்றவர், மத்தியஅரசு அனுப்பிய பதில் கடிதத்தில் என்ன இருந்தது என்பத எதிர்க்கட்சிகளுக்கு தெரியா வேண்டாமா, நீங்களாக ஒரு தீர்மானத்தை கொண்டு வருவீர்கள், அதை ஆதரிக்க வேண்டுமா என கூறியதுடன், இந்த சுரங்கத்துக்கு பிப்ரவரி மாதமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட நிலையில், கடந்த 10 மாதமாக என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இந்த சுரங்கம் அமைப்பதற்கு ஒப்பந்தப் புள்ளி கோரிய போதே இந்த எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும், அன்றே அரசு கடிதம் எழுதியிருக்க வேண்டும் என கூறியதுடன், அப்போது சுரங்கத்துக்கான எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு உரிய அழுத்தமும் கொடுக்கவில்லை என கூறினார்.
தொடர்ந்து பேசியவர், திமுக அரசு, தற்போது, சுரங்கத்துக்கு எதிராக அப்பகுதி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்த பின்னரே டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் அரசு விவரத்தை குறித்து முன்பே கடிதம் எழுதியிருந்தால், ஏலத்தையே தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்றவர், மாநில உரிமைகள் பறிபோகும்போதே திமுக எம்.பி.க்கள் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.