சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு முதல்வரிசையில் இருக்கைக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், இன்று சபை தொடங்கியதும், மறைந்த தலைவர்களக்க  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பபட்டது.

 பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர்  இன்று கூடியது. இந்த கூட்டத்தொடர் இன்றும் நாளையும்  என இரு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இன்று காலை அவை கூடியதும், சபாநாயகர்,  மறைந்து முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, இந்திய ராணுவ முன்னாள் தலைமை தளபதி பத்மநாபன் மறைவுக்கு  இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏக்கள் முகமது கனி, ஜெயராமன், தங்கவேல்ராஜ், கணேசன், ரமேஷ், சண்முகம் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இன்றைய பேரவை தொடரில்,  சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் 3வது இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் துணை முதல்வர் உதயநிதி அமர்ந்திருந்தார். முதல் இருக்கை  முதலமைச்சர் ஸ்டாலினும், இரண்டாவது இருக்கையில்,  அவை முன்னவர் துரைமுருகன், அதை தொடர்ந்து 3வது இருக்கையில் துணை முதல்வர் உதயநிதியும் அமர்ந்திருந்தனர்.