சென்னை: பெரம்பூர் அருகே  பதுங்கி இருந்த பிரபல ரவுடியை பிடிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றதால், அந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பிரபல ரவிடி அறிவழகன். இவன், பெரம்பூர் பனந்தோப்பு காலனி அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அவனை பிடிக்க காவல்துறையினர். இதையறிந்த ரவுடி அறிவழகன், காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார். அப்போது, போலீசார் அவனை துப்பாக்கியால்  சுட்டு பிடித்தனர்.  தற்காப்புக்காக ரவுடி அறிவழகனின் காலில் காவல்துறையினர் சுட்டுப் பிடித்து கைது செய்துள்ளனர்.

ரவுடி  அறிவழகன்  பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.  மேலும், இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக ஏராளமான ரவுடிகளை கைது செய்துள்ள காவல்துறையினர், தற்போது ரவுடி அறிவழகனையும் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.