தானே
தானே மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வங்கியில் கள்ள நோட்டுக்கலை டெபாசிட் செய்த போது பிடிபட்டு வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 3-ந்தேதி தானே மாவட்டத்தில் உள்ள கடாவ்லியை சேர்ந்த 48 வயது நபர் ஒருவர், அந்தப்பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கிக்கு பணத்தை டெபாசிட் செய்வதற்காக சென்றார்.
அந்த நபர் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.45 ஆயிரத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக கொடுத்துள்ளார். நோட்டுக்களை சரிபார்த்த போது அந்த நபர் கொடுத்த பணம் கள்ளநோட்டு என தெரியவந்தது.
வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபர் மீது டோம்பிவிலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கள்ளநோட்டு களை அவர் எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
[youtube-feed feed=1]