திருச்சி
நடிகை கஸ்தூரி திருச்சியில் செய்தியாளர்கைளை சந்தித்துள்ளார்.
நடிகை கஸ்தூரி திருச்சியில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்.
“தி.மு.க. கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாயில் சர்க்கரை போடுவேன். இதை பேசியதற்காகவே விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாமே..
திருமாவளவன் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியே வருவாரா என்று தெரியவில்லை. ஆனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் திருமாவளவன் வி.சி.க.வில் இனி ஒன்றாக இருப்பார்களா என்பது தெரியவில்லை.”
உதயநிதி சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என்று தெரிவித்தார். அவர் தனது ரெட் ஜெயண்ட் பற்றி சொல்கிறாரோ என்று நினைத்தேன். அவருக்கு இது ஒன்றும் புதிதில்லை.
விஜயையும், ஆதவ் அர்ஜுனாவையும் கூறியுள்ளார். ஏற்கனவே சனாதனத்தை பற்றி விமர்சனம் செய்தார். ரஜினி குறித்து விமர்சனம் செய்தார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார்.
எப்போதுமே உதய சூரியனுக்கு எதிர் ரெட்டை இலைதான் என கடந்த 60 ஆண்டுகளாகமாய் இருந்து வருகிறது. விஜய்யை பயன்படுத்தி அ.தி.மு.க.வின் உண்மையான வீச்சையும் அவர்களின் முகத்தையும் மறைக்கிறார்கள். \
இது ஒரு வியாபார தந்திரம். ஒரு கட்சியின் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனி தனியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும்.
வெள்ளத்தில் தண்ணீர் வடிந்ததற்கு காரணம் மின்மோட்டார் கொண்டு தண்ணீரை உறிஞ்சியதுதான். தானாக தண்ணீர் வடியவில்லை. விஜய், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை உசுப்பேத்திவிட்டு தி.மு.க. பிரித்தாலும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை, தி.மு.க.வை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை தி.மு.க.வை வெளியேற்ற வேண்டும் என்பதுதான். அதை தி.மு.க.வை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும்”
என்று கூறியுள்ளார்.