சென்னை: அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சரின் மிரட்டல் பேசும்பொருளாக மாறி வருகிறது. முதல்வரின் இல்லத்துக்கு அதானி வந்து சென்றதை, முதல்வரோ,அவரது குடும்பமோ இதுவரை மறுக்கவில்லை. அதுபோல,  ஸ்மார்ட் மின்மீட்டர்  கொள்முதல் டெண்டரிலும் அதானி நிறுவனம் பங்கேற்றுள்ளது. அதனால், சர்ச்சைக்குரிய அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர், அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ், தேதியுடன் கூடிய அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.  பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள், தங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது அவர்களின் கடமை. ஆனால், முதலமைச்சரோ இதற்கு விளக்கம் அளிக்க மறுத்து வருகிறார். இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

இந்த நிலையில்,  அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவும் இல்லை. அவர் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.. உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பினால் நடவடிக்கை  என அமைச்சர் செந்தில்பாலாஜி  மிரட்டல் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்திக்கவும் இல்லை. அந்தத்தனியார் நிறுவனத்துடன் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் போடவும் இல்லை. அதிமுக ஆட்சி ஒப்பந்தத்தில் கூறிய யூனிட்டுக்கு 7.01 சூரிய ஒளி மின்சார கட்டணத்தை எதிர்த்து திமுக ஆட்சியில் தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.  அவதூறு பரப்புவோர்மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

ஸ்மார்ட் மீட்டர் வாங்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடக்கூடாது! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்