ஐதராபாத்: புஷ்பா-2 படத்தின் பிரிமியர் ஷோவில் அல்லு அர்ஜூன் ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததன் எதிரொலியாக, தெலங்கானாவில் இனி அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது என மாநில அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிகாலை காட்சி தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிஅமைத்து வருகிறது. மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இருந்து வருகிறார். அவரது தலைமையின் கீழ் மாநிலத்தில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநிலத்தை உள்ளடக்கிய வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் திறமையான நிர்வாகத்திற்கான அதன் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் பல சாதனைகளை அரசாங்கம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு அல்லு அர்ஜுன் நடித்துதுள்ள புஷ்பா படம் வெளியாவதையொட்டி, அதிகாலை பிரிமியர் ஷோவுக்கு அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும் டிக்கெட் விலையை உயர்த்திக்கொள்ளவும் மாநில அரசு அனுமதி வழங்கியது.மேலும் இந்த படம் 5 நாட்கள் சிறப்பு காட்சிகளை ஓட்டவும் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தது.
இதற்கிடையில், புஷ்பா-2 படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய தெலுங்கானா அரசின் முடிவை எதிர்த்து ஐதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர் சதீஷ் கமல் என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு தடை கோரியிருந்தது. நவம்பர் 29 தேதியிட்ட மெமோ, இதன் மூலம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் விலை உயர்வுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் ஷோ பார்க்க சென்ற அல்லுஅர்ஜூனின் வெறித்தனமான ரசிகை ஒருவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அல்லுஅர்ஜுன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில் உயிரிழந்த ரசிகையின் குடும்பத்திற்கு உதவ நடிகர் அல்லு அர்ஜுன் முன் வந்துள்ளார்.
பொதுவாக ஒரு படம் ரிலீசாகும்போது, அந்த படத்தை பார்க்க நடிகரின் ரசிகர்கள் திரளுவார்கள். அவர்களுக்காக பிரிமியர் ஷோ என்ற பெயரில் அதிகாலை முதலே சில காட்சிகளை தியேட்டர் நிர்வாகங்கள் ஒட்டி கல்லா கட்டி வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளால் சிலர் மரணத்தையும்சந்திக்கின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு மரணத்தை ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகள் தடை செய்யப்பட்டது.
ஆனால், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை காட்சிகள் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கானாவில் நேற்று ரிலீஸ் ஆனது. இப்படத்தை பார்க்க ஆந்திராவில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அதிகாலை காட்சியை காண கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.
அப்படி ஐதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க வந்திருந்த பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து, இனிமேல் அதிகாலை காட்சிக்கு அனுமதி கிடையாது என தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தெலங்கானாவில் இனி அதிகாலைசிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடையாது என அம்மாநில அமைச்சர் கோமதி ரெட்டி அறிவித்து உள்ளார்.