மும்பை: ரெப்போ வட்டியில் மாற்றவில்லை ஏற்கனவே உள்ளபடி 6.5 சதவீதமாக தொடரும் என ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த 10 முறை ரெப்போ ரேட் உயர்த்தப்படாமல் தொடரும் நிலையில், தற்போது 11வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு (MPC) இன்று 3 நாள் கூட்டம் நடைபெற்ற முடிந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அதன் விவரத்தை ஆர்பிஐ கவர்னர் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.
ஆர்பிஐ கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இநத MPC குழுவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், RBI மைக்கேல் தேபாப்ரதா பத்ரா, துணை ஆளுநர், RBI ராஜீவ் ரஞ்சன், செயல் இயக்குநர், RBI ராம் சிங், இயக்குனர், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் சௌகதா பட்டாச்சார்யா, பொருளாதார நிபுணர் நாகேஷ் குமார், இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி, தொழில்துறை வளர்ச்சி ஆய்வுகளுக்கான நிறுவனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த கொள்கை குழு கூட்டத்தில் தற்போதைய 6.5% ரெப்போ விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காது என கணிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், ஆர்பிஐ கவர்னராக உள்ள சக்திகாந்த தாஸ்-ன் பதவி காலம் டிசம்பர் 10 உடன் முடிவடைகிறது. அவரது பதவி நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பதவி வருகிறது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அவர் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.
அப்போது, ரெப்போ வட்டி 6.5 சதவீதத்தில் நீடிக்கும், எந்தவித மாற்றமும் என அறிவித்தார். இதன் காரணமாக வீடு, வாகன கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றம் இருக்காது.
நாட்டின் ஜிடிபி உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல்திறனால் பாதிக்கப்பட்டு உள்ளது. 2023-24 நிதியாண்டின் அதே காலாண்டில் ஒப்பிடுகையில் நாட்டின் GDP 8.1% வளர்ச்சியடைந்தது.
ரிசர்வ் வங்கி மற்ற வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டிதான் ரெப்போ ஆகும். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு ஜி.டி.பி. 5.4 சதவீதம் ஆகும். இது எதிர்பார்த்ததைவிட குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.4% ஆக மெதுவடைந்துள்ளது என்றும் கூறினார்.