மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுள்ளார்.  துணைமுதல்வராக ஷிண்டே மற்றும் அஜித்பவார் பதவி ஏற்றனர்.

தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளது இரத  மூன்றாவதுமுறையாகும். இந்த பதவி ஏற்பு விழாவில்,  பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவின் 288 தொகுதிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக, ஏக்நாத் சிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி 233 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து, முதல்வர் யார் என்பதில் கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வந்தது. இதைத்தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மாநில முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்து லட்டர் கொடுத்தார். அதை ஏற்று, ஆளுநர் அவரை பதவி ஏற்க அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில்,  இரண்டுவார இழுபறிக்கு பிறகு மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் என்சிபியின் அஜித் பவார் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், யோகி ஆதித்தியநாத் என தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.