தமிழ்நாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் விமர்சித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல ஆயிரம் ஹெக்டரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் பல நூறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தேவையான நிதியை வழங்கியது இல்லை என்று குறிப்பிட்ட அவர் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ. 2000 கோடி விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழ்நாடு தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி திரைப்படம் பார்த்துக் கொண்டிருப்பது வேதனையளிப்பதாக உள்ளது என்று அவர் அப்போது பேசினார்.
2002 கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான ‘சபர்மதி ரிப்போர்ட்ஸ்’ என்ற திரைப்படத்தை பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களுடன் நேற்று கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.