சென்னை: சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயிலில் கடந்த மாதம் (நவம்பர்) 83,61,492 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை மக்களின் இன்றியமையாத போக்குவரத்தாக மெட்ரோ ரயில் திகழ்கிறது. விரைவான நேரத்தில் குறிப்பிட்ட நேரத்தை அடைய மெட்ரோ ரயில் மக்களுக்கு பேருதவியாக இருப்பதால், தினசரி பல லட்சம் மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தை பயன்படுத்தி தங்களது அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. சோழிங்க நல்லூர் முதல், பூந்தமல்லி வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கடந்த நவம்பம் மாதம் 01.11.2024 முதல் 30.11.2024 வரை மொத்தம் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னை மெட்ரோ நிர்வாகம் எப்போதும் சென்னை மக்களுக்கு பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான பயணத்தை வழங்க முயற்சிக்கிறது. 01.11.2024 முதல் 30.11.2024 வரை மொத்தம் 83,61,492 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜனவரி மாதத்தில் மொத்தம் 84,63,384 பயணிகள், பிப்ரவரியில் மொத்தம் 86,15,008 பயணிகள், மார்ச் மாதம் மொத்தம் 86,82,457 பயணிகள், ஏப்ரல் மாதம் மொத்தம் 80,87,712 பயணிகள், மே மாதம் மொத்தம் 84,21,072 பயணிகள், ஜூன் மாதம் மொத்தம் 84,33,837 பயணிகள், ஜூலை மாதம் மொத்தம் 95,35,019 பயணிகளும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 95,43,625 பயணிகளும், செப்டம்பர் மாதம் மொத்தம் 92,77,697 பயணிகளும், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 90,83,996 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
ஜனவரி – 84,63,384
ப்ப்ரவரி – 86,15,008
மார்ச் – 86,82,457
ஏப்ரல் – 80,87,712
மே – 84,21,072
ஜூன் – 84,33,837
ஜூலை – 95,35,019
ஆகஸ்ட் – 95,43,625
செப்டம்பர் – 92,77,697
அக்டோபர் – 90,83,996
நவம்பர் – 83,61,492
நவம்பர் 06 ஆம் தேதி மட்டும் 3,35,189 பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து இந்த வருடத்தில் அதிகப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயணிகள் எந்த சேவையை பயன்படுத்தி மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர் என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Travel card – ஐ பயன்படுத்தி 27,50,030 பேர் பயணம் செய்துள்ளனர். டோக்கனை பயன்படுத்தி 599 பேர் பயணம் செய்துள்ளனர். குரூப் டிக்கெட் மூலம் 6,208 பேர் பயணம் செய்துள்ளனர். ஆன்லைன் கியூ ஆர் மூலம் 1,57,016 பேரும், பேப்பர் க்யூ ஆர் மூலம் 18,40,921 பேரும், ஸ்டேட்டிக் க்யூ ஆர் மூலம் 2,24,276 பேரும், வாட்ஸ் அப் மூலம் 5,40,257 பேரும் பேடிஎம் மூலம் 3, 90, 030 பேரும், போன் பே மூலம் 2,99,396 பேரும் பயணம் செய்துள்ளனர்.
மேலும், ONDC மூலம் 1,10,567 பேரும், என்.சி.எம்.சி சிங்கார சென்னை கார்டு மூலம் 20,42,192 பேரும் மெட்ரோவில் பயணம் செய்திருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.