சென்னை: கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக நாளை (03.12.2024) அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நாளையும் மழைக்கான அலர்ட் கொடுக்கப்பட்ட காரணத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
அதுபோல மழையால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை (டிச.03) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
புதுச்சேரியில் நாளை பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என பகலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது (இரவு 9மணி அளவில்) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தில் நாளை (டிச.03) முதல் 5ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.