லண்டன் நகரின் மையப் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் ஆகியவை மூடப்படுவதாக லண்டன் மாநகராட்சி அறிவித்துள்ளது.

800 ஆண்டுகளுக்கும் மேலாக பாரிங்டோன் பகுதியில் இயங்கி வரும் ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தையை நகருக்கு வெளியே மாற்ற வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக அந்நகர மக்கள் குரல் எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் அந்த இறைச்சி சந்தையில் வியாபாரம் செய்து வருபவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்போதுள்ள இடத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள டகென்ஹாம் என்ற இடத்தில் புதிய இறைச்சி சந்தை அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து 2028ம் ஆண்டு இந்த இறைச்சி சந்தையை மூட திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் கேனரி வார்ப் பகுதியில் செயல்பட்டு வரும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட்டையும் டகென்ஹாம் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மீன் மார்க்கெட் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய லண்டன் மாநகராட்சி அதிகாரிகள் இதனை உடனடியாக மூடவும் மாற்று ஏற்பாடுகள் செய்யும் வரை வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து லண்டன் நகரில் பல நூறாண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்மித்பீல்ட் இறைச்சி சந்தை மற்றும் பில்லிங்ஸ்கேட் மீன் மார்க்கெட் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.