மும்பை
தங்களுக்கு முக்கிய இலாக்காக்கள் தேவை என எக்நாத் ஷிண்டே விதித்துள்ள நிபந்தனையால் மகாராஷ்டிர அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
நடந்து முடிந்ஹ்ட மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி பிரமாண்ட வெற்றி பெற்றது. இந்தக் கூட்டணி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில், இந்த கூட்டணி 230 இடங்களில் வெற்றியை பெற்றது.
இங்கு ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்உ கூட்டணி கட்சிகளான சிவசேனாவுக்கு 57 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 41 இடங்களும் கிடைத்தன. பாஜக தனிப்பெரும் கட்சியாக பாஜக வென்றுள்ளதால், முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ்தான் இருக்க வேண்டும் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.
ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் பதவி தனக்கு வேண்டும் என வலியுறுத்தியதாக சொல்லப்பட்டது. ஆயினும், பிரதமர் மோடி, அமித்ஷா எந்த முடிவு எடுத்தாலும் ஏற்க தயார் என்று ஷிண்டே கூறினார். ச்ய்ஹ்ய்ஹுஃப்ச்ம் முக்கிய இலாக்காக்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
மேலும் முக்கிய இலாகாக்களை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் என்று பாஜகவுக்கு ஏக்நாத் ஷிண்டே திடீர் நிபந்தனை விதித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இவ்வாறு மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிப்பதால், அங்கு புதிய அரசு அமைவது தள்ளிப் போகிறது.
டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஷிண்டே சொந்த கிராமத்துக்கு புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்க தயங்குவதாக கூறப்படுகிறது. அவர் துணை முதல்வர் பதவியை அவர் ஏற்காவிட்டால், அந்த பதவி சிவசேனாவின் மற்றொரு தலைவருக்கு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.