வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மணடலத்திற்கு ஃபெங்கல் என்று கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே பெயரிடப்பட்டது.
சென்னையை குறி வைக்கும் என்று இரண்டு நாட்களுக்கு முன் கூறப்பட்டது.
இருந்தபோதும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நகராமல் ஒரே இடத்தில் தொடர்ந்து பலமணி நேரமாக நீடித்த நிலையில் சென்னைக்கு குறி சொன்னது பொய்த்து போகும் என்று தோன்றியது.
தவிர, வானிலை ஆய்வு மையமும் தாழ்வு மணடலம் புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் நேற்று கூறியது.
இந்த நிலையில் லெஃப்ட்ல் இண்டிகேட்டர் போட்டு ரைட்ல் திரும்பியுள்ள இந்த காற்றழுத்த மண்டலம் மீண்டும் புயலாக மாறி சென்னையை நோக்கி நகரும் என்று வானிலை மையம் இன்று மீண்டும் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக சென்னையில் நாளை அதி கனமழை பெய்யும் என்றும் அதனால் சென்னைக்கு ரெட் அலர்ட்டும் விடப்பட்டுள்ளது.