சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் ஃபெங்கல் புயலாக மாறும் என்றும், இது மணிக்கு 8 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கி வருகிறது,  இதனால் இன்றும், நாளையும் சென்னை உள்பட வடதமிழ்நாடு, புதுச்சேரியில் நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தென் கிழக்கே 380 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. இதுவரை மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்துகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 8 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.

இந்த  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில்  பெங்கர்ல  புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே  புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயலாகவே கரையை கடக்கும் என கூறியுள்ளது.

,இதன் காரணமாக இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என்றும், இன்று இரவு 7 மணி முதல் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 400 கி.மீ நாகையில் இருந்து 310 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. தற்போது  மணிக்கு 8 கி.மீ வேகடத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரியில் கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்கும் போது 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புயலானது நாளை பிற்பகல் சென்னையை அடுத்த  மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக ஏற்கனவே டெல்டா  மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில்,  கடந்த இரு நாட்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என்றும், நாளை அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கடலில் வீசி வரும் பலத்த சூறைக்காற்றால் டிச.2 ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.