தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ, 100 ~ 200 குறைந்து வந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வரப்படுகிறது.
நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையான நிலையில் இன்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 100 – 200 குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் 500 – 1000த்தில் உயர துவங்கியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7160க்கும் ஒரு சவரன் ரூ.57,280க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.