மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது முதல்வராக உள்ள ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை இன்று ராஜினா செசய்தார். அதற்கான கடிதத்தை, அவர் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
இதை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அடுத்த அரசு பதவியேற்கும் வரை ஆளுநர் அவரை தற்காலிக முதல்வராக நீடிக்கும்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு அறிவுறுத்தினார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா, என்சிபி ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது இதைத்தொடர்ந்து யார் முதல்வர் என்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்த முறை மாநில பாஜக தலைவர், தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால், அவர் விரைவில், மகாராஷ்டிரா முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் இரண்டு துணை முதல்வர்களாக அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே பதவியேற்க வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக மும்பை ராஜ்பவனில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். அதற்கான கடிதத்தையும் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட அளுநர், அடுத்த அரசாங்கம் பதவியேற்கும் வரை ஆளுநர் அவரை தற்காலிக முதல்வராக நியமித்தார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஏக்நாத ஷிண்டே உடன் துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் உடன் உள்ளனர்.