சென்னை: தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காண்ணாமூச்சி ஆடி வருகிறது. கடந்த வாரம் மீண்டும் உயர்ந்த விலை, நேற்று முதல் மீண்டும் குறையத்ரதொடங்கி உள்ளது.

நேற்று சவரனுக்கு  ரூ.800 குறைந்து அதிர்ச்சி அளித்த நிலையில், இன்று சவரனுக்கு  ரூ.960 குறைந்து மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஓவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்து 640 வரை சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து,  பொருளாதார வல்லுநர்களும், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என  கூறினர். ஆனால், அக்டோபர்  மாதம் முதல்வாரத்தில், அமெரிக்க  தேர்தல் முடிவுகள்  வெளியானதும், தங்கத்தின் விலை சரசரவென குறையத்தொடங்கியது. நவம்பர்  7-ந் தேதி) தடாலடியாக  சவரனுக்கு ரூ.1,320 சரிந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது.

இதைத்தொடர்ந்து தொடர்ந்து சரிவை கண்டது. ஆனால், கடந்த வாரம் பழைய குருடி கதவை திறடி என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் விலை உயரத்தொடங்கியது. கடந்த வாரம்   வெள்ளி கிழமை  (நவம்பர் 22ந்தேதி) ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,800க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதையடுத்து நவம்பர் 23ந்தேதி சனிக்கிழமை சவரனுக்கு மேலும்  ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.58,400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. நேற்று (நவம்பர் 25ந்தேதி)  சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்து ரூ. 57,600-க்கு விற்பனையானது.  இந்த நிலையில், இன்று ( செவ்வாய்க்கிழமை) காலை ஒரு சவரனுக்கு  மேலும் ரூ. 960 அதிரடியாக குறைந்து,  ஒரு சவரன் ரூ. 56,640, ஒரு கிராம் ரூ. 7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வெள்ளியின் விலையும் 7 நாள்களுக்கு பிறகு கிராமுக்கு ரூ. 3 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 98,000-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுவதால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு தரப்பினர் மேலும் விலை குறையுமா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தங்கத்தின் விலையோ மக்களிடையே கண்ணாமூச்சி ஆடி வருகிறது.