லக்னோ:  உத்தரபிரதேச மாநிலத்தில்,  மசூதிக்குள் கோவில் இருப்பதாக எழுந்த புகார்களின் பேரில், நீதிமன்ற உத்தரவின்படி,  அங்கு  ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது  இஸ்லாமியர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, அவர்கள் தங்கியிருக்கும் பகுதிகளில் யாரும் நுழையாதவாறு,  ஒரு தரப்பு இஸ்லாமிய மக்கள் ராணுவத்தையும், காவல்துறையினரையும் கல்விசி தாக்கி வரும்  சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள்மீது  அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள்  கல்விசி  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் மீது தாக்குதல் நடத்துவதற்காக  அந்த பகுதியில்  பல இடங்களில் முன்னேற்பாடாக  கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மஸ்ஜித் என்ற மசூதி உள்ளது. மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் இந்து கோவிலை இடித்து இந்த மசூதியை கட்டியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்பேரில் மசூதியை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இந்த குழுவினர் இன்று காலையில் மசூதியை ஆய்வு செய்ய சென்றனர். பாதுகாப்புக்காக போலீசாரும் சென்றனர். அப்போது மசூதி அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து, மசூதியில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் தொடர்ந்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்கினர். வாகனங்களுக் கும் தீ வைத்தனர். இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதிகாரிகள் மசூதிக்குள் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த  வன்முறையில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 30 காவலர்கள் காயமடைந்தனர். சம்பல் மாவட்டத்தில் பதற்றம் நிலவுவதை அடுத்து வெளிஆட்கள் நுழைய மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, இணையதள சேவைகளும் முடக்கப்பட்டு ள்ளது.

கடந்த சில தினங்களாகவே அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 நபர்களுக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]