சென்னை: பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகதொடரப்பட்ட வழக்கில், விசாரஜைக்கு ஆஜராகாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி முருகன் மீது சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பாலியல் புகாரில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி முருகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், தன் மீதான பாலியல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆகஸ்டில் சென்னையில் உள்ள டி.வி.ஏ.சி (ஊழல் தடுப்பு இயக்குநரகம்) இணை இயக்குநராக பணியாற்றியபோது, அவர் கீழ் பணியாற்றிய பெண் போலீஸ் அதிகாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெண் போலீஸ் அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
முருகன் மீது 354 (குற்றவியல் சக்தியால் பெண்ணின் மானத்தை மீறுதல்) மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார அமைப்பின் (தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை) பிரிவு 4 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில், தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கடந்த மாதம் (நவம்பர்) முருகன் தரபிபில் சென்னை பெருநகர நீதிமன்றத்தல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சுல்தான் அரிபீன், முருகனின் மனுவை தள்ளுபடி செய்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.
“பெண்கள் துன்புறுத்தல் வழக்குகளில், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் நம்பத்தகுந்ததாக இருந்தால், இதற்கு முன்பு பல வழக்குகளில் உயர் நீதிமன்றங்கள் நடத்தியதைப் போல குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை எடுத்துக் கொண்டால் போதுமானது” என்று கூறிய அவர், அரசு தரப்பு வழக்கை ஆதரிக்காத மற்ற சாட்சிகளின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி மனுவை தள்ளுபடி செய்தார்.
குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்க ஆஜராகாததால், நீதிமன்றம் முருகனுக்கு எதிராக என்.பி.டபிள்யூ எனப்படும் ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை பிறப்பித்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.