சென்னை: தமிழ்நாட்டில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அத்துடன் அரையாண்டு விடுமுறைக்கான தேதியையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், அற்போது அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  அதன்படி,   10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

12ம் வகுப்புகளுக்கு டிச.9 ஆம் தேதி முதல் டிச. 23 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 23ம் தேதி தேர்வுகள் முடிவடைந்து அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றன.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 9.45 மணி முதல் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். 09.45 மணி முதல் 09.55 மணி வரை வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு காலை 09.45 மணி முதல் தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் 09.45 முதல் 09.55 மணி வரை வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நிமிடம் தரவுகளை சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடைபெறும்/

.அரையாண்டு தேர்வு விடுமுறை

2024 தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. டிசம்பர் 24-ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் ஜனவரி 2-ம் தேதி மூன்றாம் பருவத்திற்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.