சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை இனி தினக்கூலி / மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டுமே நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்ததாகத் தகவல் வெளியானது.

ஆசிரியர்கள் குத்தகை அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற தகவலை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள மற்றொரு சுற்றறிக்கையில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டும் தான் குத்தகை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனத்தில் குத்தகை முறை கடைபிடிக்கப்படாது என்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் மட்டுமே குத்தகை அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.