சென்னை :  நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையிர், வரும் 27ந்தேதி (நவம்பர்)  சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.

விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர்.  அவர்களிடம் பூட்டிய அறையில் நீதிபதி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில்  வரும் 27ந்தேதி  தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.

 

சமீப காலமாக இருவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தாக கூறப்படும் நிலையில், இன்றைய விசாரணை தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, 27ந்தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் மக்ள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த  2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகால திருமண உறவில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக, இருவரும் திருமண பந்தத்தில்  இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தொடர்ந்து, விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரஜினி குடும்பத்தினர், தனுஷ், ஐஸ்வர்யாக ஆகியோர்  பிரிவது சரிவராது,  வளர்ந்த இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்காவது இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று சமரசம் பேசினார். ஆனால், இதில் முடிவு எட்டப்பட வில்லை.

இதற்கிடையில், அவர்களின் விவாகரத்து மனுமீதான விசாரணை  முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கு இருவரும் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால், அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவின.  மேலும்,   ஐஸ்வர்யா  போடும் இன்ஸ்டாகிராமில் பதிவுகளுக்கு தனுஷ் சில மாதங்களுக்கு முன் இருந்து லைக் போடத் தொடங்கினார்.  இதனால் தான் இருவரும் தங்களது விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை என்றும் கூறிவந்தனர்.

இந்த நிலையில், தனுஷ், ஐஸ்வர்யா தொடர்பான விவாகரத்து வழக்க இன்று வழக்கு விசாரணை மீண்டும் நடந்தது.  விசாரணைக்கு, தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே ஆஜராகினர். நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு இருவரிடமும் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. இருவரிடமும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு தேதியை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி சுபாதேவி ஒத்திவைத்து உத்தரவிட, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.