சென்னை: நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின்  சிபிஎஸ்இ  10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப் பட்டு உள்ளது.

மத்திய கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,   சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்ககி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.4ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 18 ஆம் தேதி வரையும் தேர்வு நடைபெறுகிறது.

ஒவ்வொரு தேர்வும் காலை 10. 30 மணிக்கு தொடங்கி மடியம் 01.30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் இன்றி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும்படி சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

முதன் முறையாக தேர்வு தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்னரே Date Sheet எனப்படும் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த முறை 23 நாட்களுக்கு முன்னரே தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஎஸ்இ தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

தேர்வுக்கு பள்ளிகள் தயாராகும்படி கேட்டுக் கொண்டுள்ள சிபிஎஸ்இ, கூடுதல் விபரங்களை cbse.gov.in என்ற தளத்தில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளது.

தேர்வு தேதிகள் தொடர்பான முழு விவரத்தை காண கீழே உள்ள பிடிஎஃப் பைலை டவுன்லோடு செய்யவும்….

CBSE Exam_2025_Patrikai