கள்ளக்குறிச்சி
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் தனது பதிலில்.
”தமிழகத்துக்கு தமிழ் தான் முக்கியம். இங்கு யாரும் எந்த மொழியையும் திணிக்க முடியாது எனவும், ஒருவர் விரும்பினால் மட்டுமே அந்த மொழியை கற்க முடியும். யாரும் திணிக்க முடியாது.
‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பது போல் பேசத் தெரியாமல் பேசி நடிகை கஸ்தூரி மிகப்பெரிய சிக்கலில் மாட்டி கொண்டுள்ளார். பெண்களை தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது,
ஆனால் எத்தனையோ தலைவர்கள் என்னென்னவோ பேசி இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கைது செய்யவில்லை.
ஆனால் தீவிரவாதியை போன்று ஹைதராபாத்திற்கு சென்று போலீசார் கஸ்தூரியை கைது செய்துள்ளனர். இது வேதனைக்குரியது. ஒரு பெண்ணான அவருக்கு இது போன்று நடந்துள்ளது அநியாயம்..
த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து விஜய்யிடம் கேளுங்கள். அதிமுக தலைமையில் நல்லதொரு கூட்டணி அமையும்.”
எனத் தெரிவித்துள்ளார்.